இது அமெரிக்காவா; பாகிஸ்தானா: டிரம்ப் கட்சி எம்.பி.,க்கு வந்த சந்தேகம்
நியூயார்க்: ''டல்லசில் அல்ல; பாகிஸ்தானில் இருப்பதைப் போன்று உணர்கிறேன்,” என அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி., பிராண்டன் கில் கூறியுள்ளது தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் 26வது தொகுதி எம்.பி.,யான பிராண்டன் கில், அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். டிரம்பின் தீவிர ஆதரவாளர்.
உள்ளூர் 'டிவி சேனல்' ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பிராண்டன் கில் கூறியுள்ளதாவது:
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லஸ் பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்லும்போது, தாங்கள் டல்லசில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த அளவுக்கு மசூதிகள் அதிகரித்துள்ளது, முஸ்லிம் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. டல்லஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இஸ்லாமிய மயமாக்கப்பட்டுள்ளது.
இது தொகுதி மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதிகப்படியான முஸ்லிம் குடியேற்றம் நாம் நேசிக்கும் அமெரிக்காவை அழித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கில் கருத்து அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் ஜனநாயக கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது இனவெறி மற்றும் வெறுப்பு பேச்சு என விமர்சித்துள்ளனர். ஆனால், டிரம்பின் ஆதரவாளர்களும், எல்லை பாதுகாப்பை வலியுறுத்துவோரும், அவருடைய கருத்தை வரவேற்று உள்ளனர்.
ரொம்ப கால தாமதம் ஆகும் முன்பே சரி செய்யுங்கள் அல்லது இது மற்றும் ஒரு எகிப்து போல் இசுலாமிய நாடாக மாறிவிடும்.
அவர்களின் நோக்கம் ஒன்றே... அதனால் நடந்தே தீரும்...
கண்டுபிடிப்பு
. யான் அறிந்ந வரை எந்த மத கோவில்களிலும் இத போல நடப்பதில்லை.மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?