சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?
நமது சிறப்பு நிருபர்
தமிழகத்தில் 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் தான் பத்திரப்பதிவு நடந்து வந்தது.
ஆனால் விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதிக ஆவணங்கள் தாக்கலாகும் 100 அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என பதிவுத்துறை 2021ல் அறிவித்தது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக பிற அலுவலங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அரசு பரிசீலித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களில் சொத்து பத்திரம் மட்டுமல்லாது பிற பத்திரங்களையும் பதிய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சார் பதிவாளர்கள் கூறியதாவது: சனிக்கிழமைகளில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து வகை பத்திரங்களுக்கும் தலா 1000 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சொத்து பத்திரங்களை பதிவு செய்ய வருவோருக்கு இது பெரிய சுமையாக தெரியாது.
ஆனால் வங்கியில் ஆவண வைப்பு அடமானம் முடிப்பு தொடர்பான பத்திரங்கள், திருமண பதிவுகள் போன்ற பணிகளும் சனிக்கிழமைகளில் நடக்கின்றன. இதற்கான அடிப்படை கட்டணங்கள் 50 அல்லது 100 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளன.
சனிக்கிழமைகளில் இந்த பணிகளுக்கும் 1000 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஊரக பகுதி மக்களின் நிலையை கருத்தில் வைத்து இந்த கட்டணத்தை நீக்க வேண்டும் என மேலதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?