வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக நேற்று காலை 8:00 மணிக்கு மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.
வைகை அணையில் இருப்பில் உள்ள நீர் கடந்த சில மாதங்களாக 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. அணையில் இருந்து கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் பிப்.6 ல் முறைப்பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் வினாடிக்கு 600 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 46.06 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 429 கன அடி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement