விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த பன்னீர் ரோஜா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, புள்ளிமான்கோம்பை, புதூர் உட்பட சில கிராமங்களில் பன்னீர் ரோஜா பூக்கள் சாகுபடி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட செடிகளில் தற்போது பூக்கள் பூத்து வருகிறது.


தற்போது நிலவும் பனியால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. பூ வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு தற்போது தினமும் 10 கிலோவிற்கும் குறைவாகவே ரோஜா பூக்கள் வரத்து உள்ளது. குறைவான வரத்தால் தற்போது கிலோ ரூ.100 வரை உள்ளது. வரத்து அதிகமாகும் போது விலை ரூ.20 முதல் 30 வரையும் குறைந்துவிடும். இவ்வாறு கூறினர்.

Advertisement