காட்டுப்பன்றி பிரச்னைக்கு தீர்வு காணாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
மேட்டுப்பாளையம்: காட்டுப் பன்றிகள் பிரச்னைக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்காது என, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி நால் ரோட்டில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை மாநில மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் வேலுசாமி வரவேற்றார்.மாநாட்டில், 'விவசாயத்தையும், மக்களையும் பாதுகாக்கும் வகையில், வனவிலங்கு சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்ய, அரசியல் கட்சிகள், அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்குள் காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக விவசாயிகள் சங்கம் முயற்சி செய்கிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்காத அரசியல் கட்சிகளுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்காது' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில அமைப்பாளர் ராமதாஸ், பொது செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் முருகன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பக்தவச்சலம் உள்பட பலர் பேசினர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். சிறந்த விவசாயிகளுக்கும், விவசாய தொழிலுக்கு சேவை செய்தோருக்கும், விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, டாக்டர் சிவசாமி ஆகியோர் நினைவாக விருது வழங்கப்பட்டது. கோவை மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.
என்ன பண்ண, இங்கு விலங்கு நல ஆர்வலர்கள் என்று திரிபவர்கள் அலப்பறை தாங்க முடியல, காட்டுக்கும் நாட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க.மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை முதல் திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,28)!
-
ஸ்டிரைக்கை தொடர்ந்த வருவாய்த்துறையினர்
-
அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்
-
வரிவிதிப்பை ரத்து செய்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்; மறு விசாரணை சாத்தியமா என கேட்கிறார் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் மரணம்; டி.எஸ்.பி.,க்கு எதிரான வாரன்ட் ரத்து
-
'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை