வரிவிதிப்பை ரத்து செய்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்; மறு விசாரணை சாத்தியமா என கேட்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்த நிலையில், மறு விசாரணை சாத்தியமா? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி, இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அதீத வரிகளை விதித்தார். இவ்வரி விதிப்புக்கு, உலக நாடுகள் மட்டுமின்றி உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
பரஸ்பர வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு சர்வதேச நாடுகள் மீதான வரி விதிப்பை 10 சதவீதம் என்று நிர்ணயித்த டிரம்ப், பிறகு அதை 15 சதவீதமாக உயர்த்தினார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய வரி விதிப்பு தீர்ப்பு, பல ஆண்டுகளாக அமெரிக்காவை கொள்ளையடித்து வந்த நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைத் திருப்பித் தர வழிவகை செய்யும்.
மீண்டும் பழைய நடைமுறை தொடர்வதற்கே இந்த தீர்ப்பு வழி ஏற்படுத்தியுள்ளது. வரிவிதிப்பை ரத்து செய்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து மறு விசாரணை சாத்தியமா? இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை முதல் திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,28)!
-
ஸ்டிரைக்கை தொடர்ந்த வருவாய்த்துறையினர்
-
அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்
-
மடப்புரம் அஜித்குமார் மரணம்; டி.எஸ்.பி.,க்கு எதிரான வாரன்ட் ரத்து
-
'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை
-
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு