'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை

திருப்பூர்: திருப்பூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த, 2020ல், சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா, குற்றவாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Advertisement