ஸ்டிரைக்கை தொடர்ந்த வருவாய்த்துறையினர்

திருப்பூர்: திருப்பூரில் நான்காவது நாளாக நேற்று, வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

சிறப்பு பணிபாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில், தொடர் வேலை நிறுத்த போராட்டம், கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறையினர் 890 பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் துணை தாசில்தார், தாசில்தார்கள் நிலையிலானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வருவாய்த்துறை சார்ந்த பணிகள் முடங்கியுள்ளன.

நான்காவது நாளான நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தையும் தொடர்ந்தனர்.

தமிழக அரசு பேச்சு வார்த்தை வாயிலாக சுமூக தீர்வு ஏற்படுத்தி, வருவாய்த்துறையினர் போராட்டத்துக்கு தீர்வு காணவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement