காலை உணவை புறக்கணித்த தஞ்சை துாய்மை பணியாளர்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர், மாநகராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமில்லை எனக்கூறி, உணவை திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள, 14 கோட்டங்களில், நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், டிரைவர்கள் என, 757 பேர் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல், முதல்வரின் காலை உணவு திட்டம் மூலம், உணவு வழங்கப்பட்டது.
இந்த உணவு தரமில்லாமல், உணவு ஓவ்வாமை ஏற்படுவதாக கூறி, நேற்று காலை, 14 கோட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள், காலை உணவை சாப்பிடாமல், திருப்பி அனுப்பினர். மேலும், காலை உணவு வேண்டாம் எனக்கூறி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு, கடிதம் வழங்கினர்.
தமிழ்நாடு உள்ளாட் சித்துறை பணியாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஆனந்தராஜ் கூறியதாவது:
தஞ்சாவூர், மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக, ஒரு மாத காலமாக, 5,7,8 ஆகிய மூன்று கோட்டங்களில், பரிசார்த்த முறையில் வழங்கப்பட்டது. இதில், தனியார் கேட்டரிங் வாயிலாக வழங்கப்பட்ட சிற்றுண்டிகள், தரமற்றும், ஒவ்வாமை ஏற்படும் விதமாகவும் இருந்தது.
இதற்கிடையில், முதல்வரின் காலை உணவு துவக்க விழாவில், குறைகளை நிவர்த்தி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, வழங்கப்பட்ட உணவும், வழக்கம் போல தரமற்றதாக இருந்ததால், துாய்மை பணியாளர்கள் காலை உணவை திருப்பி அனுப்பியுள்ளனர். தரமான உணவு வழங்க, அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் உயிரிழப்பு
-
ஈரோட்டில் இளம்பெண் படுகொலை குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படை
-
காங்., செல்வப்பெருந்தகை வளரவில்லை: வி.சி., விமர்சனம்
-
'பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம்': தே.மு.தி.க., நிர்வாகி மிரட்டல் பேச்சு
-
தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு முடிவு: பா.ஜ.,
-
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி