அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

தேனி: கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுமதி, ராதிகா, தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் பல இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதில்லை. குழந்தைகளை வீடுகளிலேயே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement