குரூப்-2 தேர்வு ரத்தால் ஏமாற்றம்


ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-2 (குரூப் 2, குரூப்-2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு நேற்று, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.


இதற்காக திண்டலில் தனியார் பள்ளியில் இரு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 385 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. எட்டு மணி முதல் தேர்வர்கள் அறைக்கு வர துவங்கினர்.
இந்நிலையில் தேர்வு துவங்கிய சில நிமிடங்களில், சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடியால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து, 11:20 மணியளவில் தேர்வு ரத்து அறிவிப்பு செய்து, தேர்வர்களிடம் இருந்து விடைத்தாள், வினாத்தாளை அலுவலர்கள் பெற்று கொண்டனர்.

Advertisement