புதுச்சேரி மாநில பா.ஜ., எம்.எல்.ஏ., பிரசார வாகனத்தில் வெள்ளை பெட்டி
ஆத்துார்: ஆத்துார் அடுத்த ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் வழியாக செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பா.ஜ.,வின் பிரசார வாகனம் நேற்று காலை சென்றது. அதன் பின்புறம், 10க்கும் மேற்பட்ட பெரிய வெள்ளை நிற பெட்டிகள் சாக்குப்பைகளால் கட்டப்பட்டிருந்தது.
வாகனத்தில் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டசபை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரத்தின் படம் இருந்தது. புகைப் படத்தின் கீழ், 'பி.எம்.எல்.கே.,' என்றும், வாக்களிப்பீர் 'தாமரை' சின்னத்திற்கு என, பிரதமர், பா.ஜ., தேசிய, மாநில தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது.
பா.ஜ., பிரசார வாகனத்தில் பெட்டிகள் அடுக்கி வைத்திருந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். புதுச்சேரி மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் பிரசார வாகனத்தில் சென்ற பெட்டியில் என்ன உள்ளது?, இந்த பெட்டிகள், சேலத்தில் இருந்து, புதுச்சேரிக்கு எதற்காக செல்கிறது என, புகைப்படங்களுடன், சமூக வலைத்
தளத்தில் பதிவிட்டுள்ளதால், இவை வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
-
சைபர் பாதுகாப்பு கொள்கையில் ஒத்துழைப்பு; கனடா பிரதிநிதியுடனான அஜித் தோவல் சந்திப்பில் முடிவு
-
ஆத்துாரில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்
-
கரிய பெருமாள் கோவில் கரட்டில் தீ