ஆத்துாரில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்

ஆத்துார்: ஆத்துாரில், இரவு நேரத்தில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்களுக்கு, பூஜை செய்து மக்கள் வழிபாடு செய்தனர்.



அரிய வகை பூக்களில் ஒன்றாக கருதப்படும், பிரம்ம கமலம் பூக்களே நிஷகாந்தி என்றும் அழைக்கப்படுகின்றன. ஆண்டு க்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பிரதோஷம், அஷ்டமி, சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் மட்டுமே பூக்கும் என கூறப்படுகிறது.
அதன்படி, ஆத்துார் கடைவீதியை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரது வீட்டின் வெளி பகுதியில் பிரம்ம கமலம் செடி வைத்துள்ளார். இரவில் பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளதை பார்த்து, பொதுமக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.


பிரம்ம கமலம் பூ சிறிய அளவிலான இருக்கும் நிலையில், தாமரைப்பூ அளவில் சற்று பெரிதாக இருந்ததால் மணிகண்டன் மற்றும் பலர் கற்பூரம் காட்டி வழிபட்டனர். ஒரே செடியில் பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் படர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement