எருதாட்டம் நிறுத்தம் இளைஞர்கள் ஏமாற்றம்


தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, மல்லிக்குட்டை பனங்காட்டில் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில் கடந்த, 6ல் பக்தர்கள் தீ மிதித்து, ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றனர். நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


இந்நிலையில், எருதாட்டத்திற்கு நேற்று மாலை சுவாமிக்கு பூஜை செய்து கோவில் காளைக்கு பொட்டு வைத்து, இளைஞர்கள் கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் மாலை, 4:00 மணிக்கு எருதாட்டம் துவங்கிய போது இளைஞர்கள், 30க்கும் மேற்பட்ட காளைகளை பிடித்து வந்தனர். எருதாட்டத்திற்கு, 10 காளைகள் வரும் என போலீசில் அனுமதி பெற்ற நிலையில், 30க்கும் மேற்பட்ட காளைகள் இருந்ததால் பாதுகாப்பு கருதி போலீசார், 4:30 மணிக்கு எருதாட்டத்தை நிறுத்தினர். அதனால் காளைகளை பிடித்து வந்த இளைஞர்கள், மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Advertisement