வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு

2


சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 07) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.


இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று (பிப்ரவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 230 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் அதிகரிப்பு



வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்க நாளில் தங்கம், வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement