கனடாவில் அதிர்ச்சி; இந்திய ஐ.டி. ஊழியர் மர்ம நபரால் சுட்டுக்கொலை

1

டொராண்டோ: கனடாவில் இந்திய ஐ.டி. ஊழியர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கர்நாடகாவைச் சேர்ந்தவர் சந்தன்குமார் ராஜநந்தகுமார்(37). கனடாவில் உள்ள ப்ராம்டன் என்ற பகுதியில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார். டொராண்டோவில் உள்ள வணிக வளாகத்திற்கு அவர் சென்றபோது, அங்குள்ள மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம், பிப்.7ம் தேதி நிகழ்ந்தது.

தகவலறிந்த போலீசார், காயங்களுடன் மயங்கி கிடந்த சந்தன்குமார் ராஜநந்தகுமாரை மீட்டனர். பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்பது தெளிவாகி உள்ளது, மர்ம நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் கூறி உள்ளனர். இது, 2026ம் ஆண்டில் டொராண்டோவில் நிகழ்ந்த 3வது சம்பவம் ஆகும்.

இதுகுறித்து டொராண்டோ போலீஸ் அதிகாரி வாட்சன் கூறுகையில்," சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஏதேனும் தடயங்கள், சாட்சியங்கள் இருக்கிறதா என சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக விசாரித்து வருகிறோம். சம்பவத்தை கண்டவர்கள் யாரேனும் இருந்தால் எங்களுக்கு தகவல் சொல்லலாம்" என்றார்.

Advertisement