வேளாண் பணிகளுக்கான வாகனங்களை சோதனையில் பறிமுதல் செய்யக்கூடாது; போலீஸ் டிஜிபி உத்தரவு

சென்னை: விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று போலீசாருக்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டு உள்ளார்.

மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாகன சோதனையின் போது, விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது. விரைவாக வாகன சோதனையை முடித்து, குறித்த காலத்திற்குள், அவர்கள் செல்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

டிராக்டர்கள் உட்பட, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.

உரம் உள்ளிட்ட வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, அவசியம் இருந்தால் மட்டுமே, வாகன சோதனை செய்ய வேண்டும். இது குறித்து, போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement