காஞ்சி கோவில் மண்டபம் இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி
சென்னை: 'காஞ்சிபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான மண்டபம், வாஸ்துபடி அமையவில்லை என கூறி, இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் மனசாட்சிக்கு புறம்பானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளால், தங்கள் வீட்டினுள் நுழைய முடியவில்லை என கூறி, அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா மற்றும் சண்முகவேல் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மனுவில், 'கோவிலின் சுற்றுச்சுவரை எங்கள் இடத்திற்கு அருகில் கட்ட, அறநிலையத் துறைக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரியிருந்தனர்.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில், 'மனுதாரர் சாலையை ஆக்கிரமித்து உள்ளார். கோவிலில் உள்ள மண்டபம் முறையாக இல்லை. வாஸ்துபடி அமையவில்லை என்பதால், கோவிலை இடித்துவிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இடிக்கப்படுவதற்கு முன் இருந்த கோவில் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை பார்க்கும்போது, அங்கு உள்ள மண்டபம் புராதனமானதாகவும், முறையாக இருப்பதாகவும் தெரிகிறது. திடீரென்று பழமையான அந்த மண்டபம் வாஸ்து சாஸ்திரப்படி இல்லை என்றும், ஒழுங்கற்றதாக இருப்பதாகவும் கூறி, இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது. அதை இடித்து விட்டு, தற்போது அதேபோல கட்டுவதற்கு எவரும் கிடைக்க மாட்டார்கள்.
எனவே, கோவில் சீரமைப்பு தொடர்பான அறிக்கை மற்றும் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையை, அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை, கோவிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வழக்கு விசாரணை, வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அந்தகாலத்தில் கட்டிய எல்லா கோவில்களும் புராதன கலையம்சங்களுடன் வாஸ்து சாஸ்த்திரம் பார்த்து தான் கட்டப்பட்டிருக்கும். பல வருடம் கழித்து சரியில்லையென சொன்ன ஸ்தபதி யார்.? மண்டபத்தை இடித்து புதுசு கட்டினால் சேகர் பாபுக்கு கமிஷன் கிடைக்குமே என்பதற்காக போடப்படும் பிளான்.
திருட்டு திராவிடன் மனசாச்சி அது கிடையாது. ஒட்டு பிச்சைக்கு கையேந்துபவன் இயற்கைக்கு புரம்பாக எதையம் செய்வான். இதற்கு காரணாம் ஒட்டு போட்ட மக்கள்.
இந்த அரசு சட்டத்திற்கு புறம்பாக கோயில்களை கையக படுத்தியதுமில்லாமல் கண்டபடி தங்களுடைய மனக்கோலத்திக்கு தகுந்தபடி புராதன கட்டடங்களை இடிக்க எங்கிருந்து அவர்களுக்கு உரிமை வந்தது .கோயில்கள் எல்லாம் மக்களுக்கானது .மக்களிடம் கருத்து கேட்காமல் எதுவுமே செய்யவிடக்கூடாது .
கோயிலுக்கு முதலில் வாஸ்து கிடயாது.
பெரும்பாலான நீதிபதிகள் இந்த திராவிட அரசுக்கு பயப்படாமல் , மனசாட்சியுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் மக்களின் சூழல் இருக்கிறது..
கோவில்களை இடிப்பதே தொழிலாகக் கொண்டுள்ள இந்த தீய திமுக அரசுக்கு அறங்கெட்ட துறை துணை போவது அதர்மத்தின் உச்சம். கடைசி இரண்டு மாத ஆட்சியில் இன்னும் எத்தனை எத்தனை அக்கிரமங்கள் நடக்குமோ இறைவா உமக்கே வெளிச்சம்.
2028 ஜூலை தி மு க ஆட்சி கலைக்கப்படும் ஜோதிடரீதியாக, பின் கவர்னர் ஆட்சி நடைபெறும் 6 மாதம் 2029 பாராளுமன்ற தேர்தலோடு சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடக்கும். ஒரு 2 ஆண்டுகள் பொறுக்க வேண்டும். அணையும் விளக்கு சற்று சுடர் விட்டு பிரகாசிக்கத்தான் செய்யும் அது போல கொஞ்சம் ஆட்டம் இருக்கும்
கோர்ட் சட்டப்படி அமைக்கப்பட்டது. அங்கே தர்மம், மனசாட்சிக்கு இடமில்லை. தப்பு செஞ்சவங்களை சட்டபடி தண்டிக்கிறதை தவிர கருத்து சொல்லக்கூடாது.
அந்த கோயில் புராதன கோயில் இந்த இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திமுக அதனோட கோயில் இடிப்பு கொள்கையைதான் சொல்கிறது நீதிமன்றம் அதை புரிந்து கொள்ள பழகுங்க திரு மகா புத்திசாலி அவுர்களே
பழைய படங்களை பார்த்துவிட்டுத்தானே சொல்லுகிறார். செய்தியை உள் வாங்கவும்
This department is anti Hindu and to be abolishedமேலும்
-
உலக கோப்பை லங்காடி போட்டிக்கு முதுகுளத்துார் வீரர் தேர்வு
-
காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவனுக்கு 'காப்பு'
-
உடலில் தடிப்பு ஏற்பட்டு பள்ளி மாணவி உயிரிழப்பு
-
பள்ளி மாணவர் புத்தக பையில் கஞ்சா புகார் அளிக்காத ஹெச்.எம்.,க்கு சிக்கல்
-
கட்சிகளின் கொடி கம்பங்கள் பிளக்ஸ்களை அகற்ற வழக்கு 13 கலெக்டர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் காதலன் உட்பட 3 பேர் கைது