வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு * 'டிஜிட்டல்' கைது
: 'டிஜிட்டல்' கைது மோசடி களை கொள்ளை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை கையாள ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றுடன் இணைந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மத்திய அர சுக்கு உத்தரவிட்டது.
போ லீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே, 'டிஜிட்டல் கைது' எனப்படுகிறது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி அதிகளவில் நடக்கிறது.
இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது.
முந்தைய விசாரணையில், நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதில் ஒத்துழைப்பு தரும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நாடு முழுதும் டிஜிட்டல் கைது மோசடியால், 54,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. இத்தகைய குற்றங்கள் வங்கி அதிகாரிகளின் அலட்சியம் அல்லது உடந்தை காரணமாகவே நடக்கின்றன. இதில், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை கையாள, ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றுடன் இணைந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
டிஜி ட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க, ரிசர்வ் வங்கி மற்றும் தொலைத்தொடர்பு துறை இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -
மேலும்
-
துாய்மைப் பணியாளர்கள் நிலை உணர்ந்து முதல்வர் செயல்படுத்தும் காலை உணவு திட்டம் திருக்கோவிலுாரில் பொன்முடி எம்.எல்.ஏ., பெருமிதம்
-
கள்ளக்குறிச்சியில் மறியல் : 173 பேர் கைது
-
ஏ.கே.டி., நினைவு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
ரேஷன் வாங்காத 10 லட்சம் பேர்; பொங்கல் பரிசு வாங்குவதில் ஆர்வம்
-
மயானக்கொள்ளை விழா
-
மது பிரியர்களால் டாஸ்மாக் கடையில் 'தள்ளுமுள்ளு'