போர் விமான மின்னணு பாகம் தயாரிக்க ஆர்டர்
பெங்களூரு : மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹெச்.ஏ.எல்., என்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும், தேஜஸ் எம்.கே., 1ஏ போர் விமானத்துக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை வினியோகிக்க, மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், 80 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்றுள்ளது.
இந்நிறுவனம், தேஜஸ் எம்.கே., 1ஏ போர் விமானத்துக்கான ஏவியானிக்ஸ் அமைப்பை தயாரிக்க, இந்த ஆர்டரை பெற்றுள்ளது. இது, ஆக்சிஸ்கேட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த ஏவியானிக்ஸ் அமைப்பு, விமானம் பறக்கவும், எதிரிகளை தாக்கவும், போர் தொடர்பான இதர முடிவுகளை எடுக்கவும் உதவியாக இருக்கும்.
அதேநேரம், ரேடார் அமைப்புகள், ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொடர்பான அமைப்புகள் உள்பட, பல எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தொழிற்சாலை, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ளது.
மேலும்
-
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
காலை உணவை புறக்கணித்த தஞ்சை துாய்மை பணியாளர்கள்
-
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
-
அமைச்சர்கள் தொகுதிகளில் ஜாதி பாகுபாடு அதிகம்: சொல்கிறார் கிருஷ்ணசாமி
-
ஆக்கிரமிப்பால் சுருங்கிய ரோடு, மின்கம்பத்தால் இடையூறு தேனி பென்னிகுவிக் நகரில் பொதுமக்கள் தவிப்பு
-
ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்