டெக்ஸியான் நிறுவனத்துக்கு சென்னையில் புது அலுவலகம் 2,000 வேலைவாய்ப்பு உருவாகும்

சென்னை: மனித வள தீர்வுகள் மற்றும் ஐ.டி., சேவைகளை வழங்கி வரும் டெக்ஸியான் நிறுவனம், புதிய அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் குமார் ராஜகோபாலன், சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி மருப் அகமது ஆகியோர் தெரிவித்ததாவது:

கடந்த 2022 முதல் சென்னையை தலைமையகமாக கொண்டு 2,200 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறோம். முன்பு ஐ.ஐ.எஸ்.ஒய்.எஸ்., என்ற பெயரில் இயங்கி வந்தோம். நொய்டா, பெங்களூரு, புனே, மும்பையில் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது புது அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 650 ஊழியர்கள் உள்ளனர்.

அந்த எண்ணிக்கை 870 ஆக உயர்த்தப்படும். இவர்கள் தகவல் தொழில்நுட்பம், நிர்வாக சேவைகள் தொடர்பான பணிகளை செய்வர்.

அடுத்த 1 - -2 ஆண்டுகளில் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் ஊழியர் எண்ணிக்கையை 2,000 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவிலும் உலக அளவிலும் டெக்ஸியான், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. நம் நாட்டுக்கு வெளியே, பிரேசில், ஐரோப்பா உள்ளிட்ட 13 சர்வதேச சந்தைகளில் இயங்கி வருகிறோம். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தங்கள் கிளை திறக்க ஆலோசனை வழங்கி வருகிறோம். பெரும்பாலும் நடுத்தர நிறுவனங்களையே இலக்காக கொண்டு செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement