'இந்தியன் கேஷூ' பிராண்டு முந்திரி ஏற்றுமதிக்கு ஊக்கம்
கொல்லம் : 'இந்தியன் கேஷூ' என்ற பெயரில், நம் நாட்டின் முந்திரியை சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பிரபலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடாவும் இந்திய பிராண்டு ஈக்விடி பவுண்டேஷனும் கைகோர்த்துள்ளன.
முந்திரி உற்பத்தியில், உலகில் மூன்றாம் இடம் வகிக்கும் நம் நாட்டில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட முந்திரி ஏற்றுமதியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியா, ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், முந்திரி ஏற்றுமதிக்கு புதிய சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், பூஜ்ஜியம் வரியில் முந்திரி ஏற்றுமதி செய்யவும், அதை இந்திய பிராண்டாக முதன்மைப்படுத்தவும் ஏற்றுமதியாளர்களுக்கு அபேடா அழைப்பு விடுத்துள்ளது.
அதன் அறிக்கை வருமாறு:
கடந்த 2023ல் இருந்து முந்திரி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகளவில் 19 சதவீத முந்திரி நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2024- - 25ல் 8,02,000 டன் முந்திரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஓமன், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் வாயிலாக, வரியின்றி முந்திரியை ஏற்றுமதி செய்யலாம். இடைக்கால வர்த்தக ஒப்பந்த செயல் திட்டத்தின்படி அமெரிக்காவுக்கும் முந்திரி அனுப்பலாம்.
வறுத்த முந்திரி, உப்பு சேர்க்கப்பட்ட முந்திரி, சுவையூட்டப்பட்ட முந்திரி என பலவிதமான பொருட்களாக முந்திரியை ஏற்றுமதி செய்து, சர்வதேச அளவில் இந்தியன் கேஷூ முக்கிய பிராண்டாக, பிரீமியம் பொருளாக மாற, இத்தொழிலை சார்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும்
-
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
காலை உணவை புறக்கணித்த தஞ்சை துாய்மை பணியாளர்கள்
-
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
-
அமைச்சர்கள் தொகுதிகளில் ஜாதி பாகுபாடு அதிகம்: சொல்கிறார் கிருஷ்ணசாமி
-
ஆக்கிரமிப்பால் சுருங்கிய ரோடு, மின்கம்பத்தால் இடையூறு தேனி பென்னிகுவிக் நகரில் பொதுமக்கள் தவிப்பு
-
ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்