மது பிரியர்களால் டாஸ்மாக் கடையில் 'தள்ளுமுள்ளு'

ஊட்டி: மது பிரியர்கள் ஒரே நேரத்தில் மது வகைகளை வாங்க குவிந்ததால் 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.

'பணி நிரந்தரம், காலம் முறை ஊதியம், ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்துதல், ஊழியர்களை காலி பாட்டில்களை திரும்ப வாங்கும் படி துன்புறுத்தக் கூடாது, ஒப்பந்ததாரரே காலி பாட்டில்களை வாங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பகல், 12:00 மணி முதல் , 3:00 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை அறியாத மது பிரியர்கள், கடை திறக்கும் நேரத்தில் அந்தந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பகல், 3:00 மணிக்கு தான் திறக்கப்படுவதை அறிந்து அப்செட் ஆகினர்.

ஊட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடை திறக்கும் போது வழக்கத்தை விட மது பிரியர் களின் கூட்டம் அதிகரித்தது. தள்ளு முள்ளு ஏற்பட்டதால் ஊழியர்கள் வரிசையில் காத்திருந்து வாங்க சொல்லி அறிவுறுத்தினர். அதில், கமர்சியல் சாலையில் ஒரு கடை மட்டும் முன்னதாகவே திறந்து செயல்பட்டதாக, சில டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement