ரேஷன் வாங்காத 10 லட்சம் பேர்; பொங்கல் பரிசு வாங்குவதில் ஆர்வம் 

12

சென்னை: ரேஷன் பொருட்கள் வாங்காத, 10 லட்சம் கார்டு தாரர்கள், கடந்த மாதம், 3,000 ரூபாய் ரொக்கத் துடன் வழங்கப்பட்ட, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கியுள்ளனர்.


ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.


அரிசி, சர்க்கரை, எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்களுக்கு என, தனி ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.



சராசரி மொத்தம் உள்ள, 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களாக உள்ளனர். இதில், மாதம் சராசரியாக, 93 சதவீதம் அதாவது, 2.06 கோடி கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர்.


அதன்படி, 2025 அக்., நவ., டிச., ஆகிய மூன்று மாதங்களிலும் சராசரியாக தலா, 93 சதவீதம் பேர் வாங்கினர். மீதம் பேர், அரிசி கார்டு வைத்திருந்தும் பொருட்கள் வாங்குவதில்லை.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு, கடந்த ஜனவரியில் வழங்கியது. அம்மாதம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டது.


அவற்றை, 2.16 கோடி பேர் வாங்கியுள்ளனர். அதாவது, ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்த, 10 லட்சம் பேரும், பொங்கல் பரிசு, 3,000 ரூபாய் ரொக்கத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.


முக்கிய காரணம் இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதி காரி ஒருவர் கூறியதாவது:


மாதம் சராசரியாக, 93 சதவீதம் பேர் பொருட்கள் வாங்கும் நிலையில், 97 சதவீதம் பேர் பொங்கல் பரிசு வாங்கியுள்ளனர். இதற்கு, 3,000 ரூபாய் ரொக்கம் முக்கிய காரணம். அரிசி கார்டு வைத்திருந்தும், 6 லட்சம் பேர் இன்னும் பரிசு பணம் வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement