'தமிழகத்தில் குடும்ப ஆட்சி மட்டுமே நடக்கிறது' முன்னாள் அமைச்சர் வேலுசாமி கருத்து
குன்னுார்: ''தமிழகத்தில் குடும்ப ஆட்சி மட்டுமே நடக்கிறது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுசாமி பேசினார்.
குன்னுார் வி.பி., தெருவில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநில ஏ.டி.பி., இணை செயலாளர் மணி தலைமை வகித்தார்.
குன்னுார் தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் வேலுசாமி பேசுகையில், ''அ.தி. மு.க., ஆட்சி காலங்களில் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; பழனிசாமி ஆகியோரின் செயல் திட்டங்கள் மக்களுக்கு தேவையான சிறந்த நலத்திட்டங்களாக செயல்படுத்தப்பட்டன.
ஆனால், நடப்பு ஐந்து ஆண்டு காலம் தமிழகத்தில், தி.மு.க., குடும்ப ஆட்சி மட்டுமே நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
மாணவ சமுதாயம் போதைக்கு அடிமையாகியுள்ளது. கொலைகள் அதிகரித்து, சீரழிந்த மாநிலமாக உள்ளது,'' என்றார்.
மாவட்ட செயலாளர் வினோத், அமைப்பு செயலாளர் அர்ஜுணன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் பாலநந்தகுமார், தலைமை பேச்சாளர் கோபி காளிதாஸ், முருகானந்தம், ஜெகதீஸ் உட்பட பலர் பேசினர்.
மேலும்
-
இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
-
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
-
தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி
-
கண்ணுக்கு கருப்பு துணி கட்டி போராட்டம்; 2ம் நாளாக களமிறங்கிய கவுரவ விரிவுரையாளர்கள்
-
அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்