அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கிணத்துக்கடவு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று (10ம் தேதி) முதல், ஊரக வளர்ச்சித்துறை துறையில் காலியாக உள்ள, 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டமான, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும், ஏழை, எளிய மக்கள் வீட்டினை முழுமையாக சிரமமின்றி கட்டும் வகையில் வழங்கும் தொகையை, 6 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இப்பணிகளை கவனிப்பதற்கு வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் --- 12, பொள்ளாச்சி வடக்கு --- 18, பொள்ளாச்சி தெற்கு --- 23 மற்றும் ஆனைமலை ஒன்றியம் --- 29 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்