வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

உடுமலை: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டம் காரணமாக, தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகள் பாதித்தன.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அலுவலர்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கும் வகையில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பணிப்பளுவை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பணியிடங்களிலும் நிரந்தர ஊழியர்கள் நியமிக்கவும், கருணை அடிப்படையில் பணி நியமனத்தை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த போராட்டம் காரணமாக, உடுமலை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும், 125 அலுவலர்கள், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், 44 அலுவலர்கள் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், 8 அலுவலர்கள் என, 90 சதவீதம் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதித்தன.

Advertisement