கூடுதல் இடம் வேண்டும்; மக்கள் சாலை மறியல்

திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே குறவன் குட்டை பகுதி உள்ளது. இதில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில மாதங்கள் முன், தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். அதிகாரிகள் சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில், அங்கு வசித்து வரும் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டா வழங்கப்பட்டது.

அரசு வழங்கிய இடம் தங்களுக்கு திருப்தியில்லை. கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தாலுகா தாசில்தார் சரவணன், வீரபாண்டி போலீசார் பேச்சு நடத்தினர். அதில், வேறு இடம் குறித்து,' அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்த 'நாங்கள் வசிக்கும் இதே இடத்தில் கூடுதலாக இடம் வழங்க வேண்டும்,' என அப்பகுதி மக்கள் கூறினர். 'சர்வேயர் அளந்த பார்த்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அதிகாரிகள் கூறியதை ஏற்ற பொதுமக்கள், கலைந்து சென்றனர்.

Advertisement