தடகள போட்டியில் 'தடம்' பதித்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
கோவை, மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஜன., 28 முதல் நடந்துவந்தது.
ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் கோ-கோ, கபடி, தடகள போட்டிகள் நடந்தன. 64 பள்ளிகளில் இருந்து 6-9ம் வகுப்பு வரை பயிலும், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நேரு ஸ்டேடியத்தில் தடகள போட்டிகள் நடந்தன. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 600 மீ., ஓட்டத்தில் ஆதிஷ், ஜீவா, முத்துசரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 14 வயது பிரிவில் ஜனரத்தினன், வக்கீஷ், மோகன் ஆகியோரும், 17 வயதுக்கான 800 மீ. ஓட்டத்தில் ஜான் பீட்டர், முகமது பாசில், சந்தோஷ்குமார் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
12 வயது மாணவியருக்கான 600 மீ. ஓட்டத்தில் ஸ்ரீமதி, மகாலட்சுமி, சஞ்சனா ஆகியோரும், 14 வயது பிரிவில் நந்தினி, பார்கவி, சகானா பானு ஆகியோரும், 17 வயதுக்கான 800 மீ. ஓட்டத்தில் அன்லின் லிரிண்டா, சுபஸ்ரீ, பிரகாஷினி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றனர்.
மேலும்
-
கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்; முதல்வருக்கு காங்., எம்பி பதில்!
-
அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்
-
ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!
-
இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
-
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்