அன்னுார் ஊராட்சியில் பணிகள் முடக்கம்
கோவை, 5 ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு எட்டவில்லை. எனவே,
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளோம்.
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலியாக உள்ள ஆயிரத்திற்கு அதிகமான பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்; மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் உரிமைகளை வழங்க வேண்டும்; கணினி உதவியாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பவை இவர்களின் முக்கிய கோரிக்கைகள்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், '5 ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு எட்டவில்லை.
எனவே, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளோம். பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை கேட்டு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்காக நாங்கள் அஞ்சவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும்,' என்றனர்.
பணிகள் பாதிப்பு இந்த வேலைநிறுத்தம் காரணமாக எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி பணிகள், ஒப்பந்ததாரர்களுக்கான பட்டியல் தொகை (பில்) விடுவிப்பு மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும்
-
கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்; முதல்வருக்கு காங்., எம்பி பதில்!
-
அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்
-
ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!
-
இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
-
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்