ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியை கேட்கும் கம்யூ., கட்சிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: தி.மு.க., கூட்டணியில் ஸ்ரீவில்லிபுத்துார் தனி தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்பதால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத் தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது.
2021 சட்டசபை தேர்தலில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் என அடுத்தடுத்த இரு தொகுதிகள் காங் கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லி புத்துாரில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. அ.தி.மு.க. வென்றது. இதனால் தி.மு.க.வே போட்டியிட்டு இருந்தால் நாமே வெற்றி பெற்றிருக்கலாம் என, தங்கள் கட்சி தலைமையிடம் கூறினர்.
தற்போது அ.தி.மு.க.வே போட்டியிட வாய்ப்புள்ளதால், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் தாங்களே போட்டியிட வேண்டுமென தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், ஏற்கனவே இத்தொகுதியில் இந்திய கம்யூ.,சார்பில் ராமசாமி, பொன்னு பாண்டியன் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த முறை தங்களுக்கே ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியை தர வேண்டும் என தி.மு.க., தலைமைக்கு கொடுத்த தொகுதி பட்டியலில் இந்திய கம்யூ., கேட்டுள்ளது.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீவில்லிபுத்தூரை கேட்டு உள்ளது. இரு கட்சிகளும் கேட்பதால் இந்த முறை ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி யில் தி.மு.க. போட்டி யிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தொகுதி தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்