கனடா 9 பேரை சுட்டுக் கொன்று பெண் தற்கொலை
ஒட்டாவா: கனடாவில் பள்ளி மற்றும் குடியிருப்பு வளாகத்தில் ஒன்பது பேரை சுட்டுக்கொன்ற பெண், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வட அமெரிக்கா நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ளது டம்ப்ளர் ரிட்ஜ் என்ற சிறிய நகரம். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில், நேற்று மதியம் பெண் ஒருவர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குச் சென்ற அந்த பெண் அங்கிருந்தவர்களை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பள்ளியில் ஏழு பேரும், குடியிருப்புவாசிகள் இரண்டும் பேரும் உயிரிழந்தனர்; 25 பேர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்தப்பெண் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தெரியாத நிலையில், இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
Advertisement
Advertisement