எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

27

சென்னை: ''நாங்கள் செய்த சாதனைகளை அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்கள் தான் முறியடிப்போம். நாட்டின் வளர்ச்சியை விட தமிழகம் வளர்ச்சி அதிகம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் 52 தொழில் நிறுவனத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.74,267 கோடியில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 52 தொழில்நிறுவன திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


வளர்ச்சி



திராவிட மாடல் என்றால் மக்கள் நன்மைக்காக இருக்கக்கூடிய மாடல். இதையெல்லாம் உலகுக்கு எடுத்துச்சொல்லக்கூடிய மாநாடுதான் இந்த 'தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு'. தமிழகம் தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்று அனைத்து புள்ளி விவரங்களும் சொல்கிறது. இன்று தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் சராசரியை விட 11.19 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

@quote@கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 4.5 சதவீதம். அதே சமயம் தமிழகத்தின் வளர்ச்சி அதை விட 3 மடங்கு அதிகமாக 14.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. quote

மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 41 சதவீதமாகும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புரிந்துணர்வு போட்டுட்டோம், நியூஸ்ல வந்துருச்சினு இருக்க மாட்டோம். அந்த நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்து, நம்ம இளைஞர்களுக்கு ஆஃபர் லெட்டர் கையில வர வரைக்கும் பார்த்துப் பார்த்து பாலோ செய்கிறோம். தமிழகத்தில் மட்டும் ஒப்பந்தம் போட்ட குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என பலரும் கேட்கின்றனர்.

இது உறுதி



ஒருங்கிணைத்து பணிகளைச் செயல்படுத்தக் கூடிய அணி, மனித வளம், நிலம் என அனைத்து அம்சங்களும் இங்கே இருக்கின்றன. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவது என்ற டார்கெட் இருக்கிறது. அதனால் நிறைய முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள். தமிழகம் தொழில்துறையில் நாங்கள் செய்துள்ள ரெக்கார்ட்-ஐ அடுத்து நாங்கள் வந்து தான் முந்தப் போகிறோம். அடித்துச் சொல்கிறேன். இது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement