நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. நாடு முழுவதும் நடந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.


கேரளா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கங்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கேரளாவில் பொது போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.



தமிழகத்தை பொறுத்தவரை கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.

Advertisement