அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
விழுப்புரம்: என்னை அரசியலில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: ஒரு பொய் கூட்டம், பொய்யும் புரட்டுமே அரசியலாக நடத்திக் கொண்டு இருக்கிறது. நாங்கள் அந்த கூட்டத்தை கட்சியில் இருந்தே நீக்கி விட்டோம். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அவர்களோடு சேர்ந்த சில கூட்டங்கள் பொய், பொய்யாக பேசுகிறது. இட்டுக்கட்டி பேசுவது, ஏளனமாக பேசுவது, மனம் புண்படும் வகையில் பேசுவது ஆகியவற்றை செய்கிறது.
என்னை மட்டுமல்ல 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த கவுரவ தலைவர் ஜிகே மணியையும் வசை பாடுபவதை தொழிலாக செய்து வருகிறது. பொய்யர்கள் கூட்டம், அரசியல் பேசாமல் என்னை அரசியலில் இருந்தே ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் எதை, எதையோ பேசுகிறார்கள். டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷனில் இருக்கும் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு வழக்கு போடுகின்றனர். தேர்தல் கமிஷனை ஒரு வழக்கு போடுவது வேடிக்கையிலும், வேடிக்கை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
அதற்க்கு முன்ப. நீங்களா விலகிடுங்க அதுதான் நாகரீகம் வயது ஆனால்
பத்தாது அதற்கு உரிய முதிர்சி வேணும் அது உம்மிடம் இல்ல
நல்லது
பாவம் வன்னியர்கள் இவரால் ஏமாற பட்டார்கள் .
பீகாரின் லல்லுவிற்கு ஐம்பது சதவீதம் அரசியல் தெரியும். மீதி ஐம்பது சதவீதம் சம்பாதிக்கத் தெரியும். இதில் மீதியை மட்டுமே கற்றுக் கொண்ட தைலாபுரத்தார் பாதிக் கிணறு தாண்டியவராகவே இருக்கிறார்.
நீங்களாகவே அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும், மற்றவர்கள் தள்ளுவதற்குப்பதில். மரியாதை மிஞ்சும். அது இப்ப இருக்குதா? சந்தேகம்தான்
இரண்டு பெட்டிகள் இரண்டு திராவிட கட்சிகளிடம் வாங்கலாம் என்ற நிலையில் விசிக ஒரு திராவிட கட்சிகளிடம் போக முட்டுக்கட்டை போட்டு விட்டது. விசிக விடம் பேரம் பேசி திமுக கொடுக்கின்ற பெட்டியை பங்கு போட்டு கொள்ளலாம் என்று விசிக விடம் பேசி பாருங்கள்.
எல்லா மகன்களும் அப்படித்தான் இருப்பர்கள் .
அது சரி, உங்க கட்சி உங்களுக்கு இல்லை அன்பில்லாமணிக்குனு கோர்ட், தேர்தல் கமிசன் சொல்லீரச்சே, நீங்க இனி என்ன செய்ய போறீங்க,, இதேமாதிரி வெட்டி வசனம் பேசீட்டு இருக்க போறீங்களா? வேறு புதிய கட்சி தொடங்கபோறீங்களா? இல்லை வழக்கு வாய்தானு காலமகடத்த போறீங்களா?மேலும்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்