பாகிஸ்தானை திணறடித்த எஸ்-400 ஏவுகணைகள்; ரூ.10 ஆயிரம் கோடிக்கு வாங்கும் இந்தியா
புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை, ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க இந்திய அனுமதியளித்துள்ளது.
கடந்தாண்டு நடந்த ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, அத்துமீறிய பாகிஸ்தானின் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் டிரோன்களை வீழ்த்த எஸ்-400 அமைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, ஒரு S-400 நீண்ட தூர ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்குள் 314 கிமீ தொலைவில் இருந்த விமானம் மற்றும் ரேடார் நிலைகளை இந்தியா துல்லியமாக தாக்கியது.
இதனால் பயந்து போன பாகிஸ்தான், தனது விமானங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதி தளங்களுக்கு மாற்றியது. மே 9 மற்றும் 10 தேதிகளில் ஆதம்பூர் மற்றும் புஜ் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த எஸ்-400 அமைப்புகளின் மீது எழுந்த அச்சத்தால் பாகிஸ்தான் விமானப்படை பின்வாங்கியது.
இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நேற்று (பிப்ரவரி 12) கூடியது. அப்போது, மொத்தம் ரூ.3.60 லட்சம் கோடிக்கு ராணுவ உபகரணங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 120 குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் 168 நீண்ட தூர ஏவுகணைகள் என மொத்தம் 288 எஸ்-400 ஏவுகணை வாங்க அனுமதியளிக்கப்பட்டது.
ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மேலும் இரண்டு எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் இந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு வரவுள்ளன. இதே கூட்டத்தில் பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (13)
பேசும் தமிழன் - ,
13 பிப்,2026 - 18:45 Report Abuse
ரஷ்யா இந்தியாவின் உண்மையான நட்பு நாடு... நண்பனுக்காக s400 மட்டுமல்ல ஸ் 500 கூட கொடுக்கும்.... ஆனால் அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.... அவர்களை நம்ப கூடாது. 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
13 பிப்,2026 - 10:54 Report Abuse
என்ன கொடுமைய்யா இது? திமுக முதல்வர் எப்ப பேசுனாலும், இல்லாத சட்டம் ஒழுங்கை பற்றியும், வராத தொழில் முதலீடுகள் பற்றியும், கட்டாத மழைநீர் வடிகால்கள் பற்றியும் அனைத்தும் சூப்பராக நடந்து தமிழகத்தை திராவிட மாடல் ஆட்சி நெ.1. ஆக மாற்றியதாகவும் இஷ்டத்துக்கு மலையளவு தம்பட்டம் அடிப்பார், அதை இந்த 200 ரூபா உபிஸ் தாங்கு தாங்குன்னு முட்டு கொடுத்து பாஜக வை தேவையின்றி தாக்குவாங்க ஆனா,பாஜக அரசு பக்கிஸ்தானை அதன் நாட்டுக்குள்ளேயே அடிச்சிட்டு வந்து, ராகுல் மாதிரி அபத்த தலைவர்களுக்காக வீடியோ போட்டு காட்டினா, அது ஏன்யா எதிரி இண்டி விடியல் உபிக்களே உங்களுக்கு வலிக்குது? அத்தனை தைரியமுள்ளை ராணுவத்தை பாராட்டி பேசுனா அதை தம்பட்டம் என சொல்ற நீங்க எல்லாம் மனுசங்க தானா? இங்க உட்கார்ந்து கருத்து சொல்ற 200 ரூபா உபிஸூக்கு என்ன தெரியும்? நாள் முச்சூடும் எதிரிகள் சுடரானா, குண்டு போடறானான்னு வேவு பார்க்கறவங்களுக்கு நீங்க நக்கல் கமெண்ட் போடுவது ""தேச துரோகம் ". வேற எதாவது, சிவாவா, தலயா, தளபதியா யாரு டாப்பு, கெத்துன்னு கருத்து போடுங்க, அது தான் உங்களுக்கு செட் ஆகும் & 0
0
Reply
Venugopal S - ,
13 பிப்,2026 - 09:54 Report Abuse
மத்திய பாஜக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் இல்லாமல் நாம் இன்னும் ஏவுகணைகளை சுயமாகத் தயாரிக்காமல் மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கிக் கொண்டு இருக்கும் பரிதாபமான நிலையில் தான் இருக்கிறோமா? 0
0
SUBBU,MADURAI - ,
13 பிப்,2026 - 10:41Report Abuse
இந்தியா சொந்தமாக உருவாக்கி, வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முக்கிய ஏவுகணைகள்: அக்னி கண்டம் விட்டு கண்டம் பாயும். (ICBM) அக்னி-V, அக்னி-VI.
பிரித்வி (Prithvi) நிலத்தில் இருந்து நிலத்திற்கு பாயும் முதல் ஏவுகணை. நிர்பய் (Nirbhay) தரை, கடல், மற்றும் வான்வழியில் ஏவக்கூடியது.
ஆகாஷ் (Akash) அஸ்திரா (Astra)
நிலத்தில் இருந்து வான்வெளியை தாக்கும் ஏவுகணை. 0
0
vivek - ,
13 பிப்,2026 - 10:51Report Abuse
வரிசையில் நின்று மூவாயிரம் ரூபாய் கையேந்தி வாங்கினார்...அவர் நிலைமை அப்படி 0
0
Kumar Kumzi - ,இந்தியா
13 பிப்,2026 - 11:16Report Abuse
ஓவாவுக்கு ஓட்டு போடுற கொத்தடிமை சொல்லுறான்யா ஹாஹாஹா 0
0
Venugopal S - ,
13 பிப்,2026 - 11:23Report Abuse
அத்தனை செய்ய முடிந்தவர்களால் இதைச் செய்ய முடியவில்லையா? 0
0
Anand - chennai,இந்தியா
13 பிப்,2026 - 11:47Report Abuse
நல்ல குடும்பத்தில் பிறந்த எவரும் இப்படி நம் நாட்டை பற்றியும் ராணுவத்தையும் விமர்சிக்கமாட்டான். 0
0
guna - ,
13 பிப்,2026 - 12:01Report Abuse
சுயமாக சிந்திக்க .. வீணா போன.... 0
0
ஆரூர் ரங் - ,
13 பிப்,2026 - 14:44Report Abuse
போர் விமானங்களை வாங்க அரசிடம் நிதியே இல்லை என பார்லிமெண்டில் பஞ்சப் பாட்டு பாடியது UPA அரசின் ராணுவ அமைச்சர் AK அந்தோனி. இப்போ பாரதம் ரஃபேல் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்போகிறது. 0
0
vivek - ,
13 பிப்,2026 - 15:56Report Abuse
நிற்பது அறிவாலய வாசலில் தட்டுடன்.. பேசுவது ஏவுகணை..என்ன வேணு இது 0
0
பேசும் தமிழன் - ,
13 பிப்,2026 - 18:46Report Abuse
வேணு 0
0
Reply
SUBBU,MADURAI - ,
13 பிப்,2026 - 09:08 Report Abuse
2023 ம் ஆண்டு இந்தியா தன்னிடம் இருந்த பிரம்மோஸ் ஏவுகணைகளை சோதித்துப் பார்த்தது. அப்படி Test பண்ணிப் பார்க்கும் போது அதில் இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகள் தவறுதலாக பாகிஸ்தானில் போய் விழுந்தது. ஆனால் உண்மையில் இந்தியா தவறுதலாக அந்த இரண்டு ஏவுகணைகளையும் ஏவி விடவில்லை! மாறாக சோதனை செய்வதற்காகவே பாகிஸ்தான் நாட்டின் உள்ளே ஆளில்லாத இடம் பார்த்து ஏவிவிட்டு சோதனை நடத்தியது. அந்த இரண்டு ஏவுகணையில் ஒன்று பாகிஸ்தானில் இருக்கும் வயல்வெளியிலும் மற்றொன்று பாகிஸ்தானில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்தின் சுவற்றிலும் மோதி வெடித்து சிதறியது. நாம் ஏவிய அந்த ஏவுகணையை பாகிஸ்தானில் உள்ள ரேடாரோ அல்லது ஏவுகணை தடுப்பு சாதனங்களோ எதுவும் முன்பே கண்டுபிடித்து அதை வானிலேயே தாக்கி அழிக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே இந்தியா அந்த சோதனையை செய்தது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்த ஏவுகணை தடுப்புக் கருவிகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்பதை இந்தியா இதன்மூலம் நன்கு தெரிந்து கொண்டது. அதன் பிறகு இரண்டு நாள் கழித்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதற்கு இந்தியா Sorry ஏதோ தவறுதலாக Misfire ஆகிவிட்டது என்று கூலாக சொல்லி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆக 2023 ம் ஆண்டே பாகிஸ்தானின் பாதுகாப்பு சாதனங்கள் எந்த லெட்சணத்தில் உள்ளன என்பதை இந்தியா துல்லியமாக கணித்து வைத்திருந்தது. அதனால்தான் ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களையும் விமான ஓடுபாதைகளையும்
இஷ்டத்துக்கு போட்டு துவம்சம் பண்ணியது. மேலும் நம் இஸ்ரோ (ISRO) விண்ணில் ஏவிய நாவிக் (NAVIC) என்ற GPS செயற்கைக் கோளின் வழிகாட்டலின் துணையுடன் பாகிஸ்தானின் கிரானாஹில்ஸின் (Kirana Hills) சுரங்கத்தில் இருந்த அணுஆயுதங்கள் மீதும் (Nur Khan Airbase) நூர்ஹான் விமான தளத்தின் மீதும் மிகத் துல்லியமான தாக்குதலை நடத்தி அதை நொறுக்கிப் போட்டது. 0
0
Reply
மேலும்
-
குவாரி துவங்க கருத்து கேட்பு; வேறு கிராமத்தில் நடத்தாதீங்க!
-
பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
-
ஆன்லைனில் அலுவலக கட்டணம் ஆப்லைனில் அன்பளிப்பு கட்டணம்; தனியார் மருத்துவமனைகளுக்கு சொத்துவரியில் சீரமைப்பு தேவை
-
பெங்களூரு அருகே கோர விபத்து; 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலி
-
தயாராகுங்கள் மாணவர்களே!
-
போடி - துாத்துக்குடி பகல் ரயில் சேவை தேவை; சும்மா நிற்கும் பெட்டிகளை கொண்டு இயக்கலாம் பயணிகள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement