பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்றும் பணி துவங்கியது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணியில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து துவங்கிய நிலையில், பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனை ரூ.2.51 கோடியில் அகற்ற ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது. அதன்படி தனியார் ஒப்பந்த ஊழியர்கள் பாலத்தை அகற்ற இரும்பு தளவாடப் பொருள்கள் மற்றும் ராட்சத கிரேனை லாரியில் பாம்பனுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் முதலில் பழைய துாக்கு பாலத்தை அகற்ற காஸ் சிலிண்டர், வெல்டிங் கருவிகளை கொண்டு வந்து அகற்றும் பணியை துவக்கினர். ஜூன் இறுதிக்குள் பாலத்தை அகற்றும் பணி முடியும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
-
திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்
Advertisement
Advertisement