தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1520 சரிவு

1

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 10) ஆபரண தங்கம், கிராம், 14,580 ரூபாய்க்கும், சவரன், 1,16,640 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (பிப்ரவரி 11) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 14,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 1,16,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.



மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 190 ரூபாய் அதிகரித்து, 14,790 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் உயர்ந்து, 1,18,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,680 ரூபாய் உயர்ந்தது.


இந்நிலையில் இன்று (பிப்ரவரி 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement