தேவைக்கு ஏற்ப தேவையான இடத்தில் கச்சா எண்ணெய் கொள்முதல்; மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: 'உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான இடங்களில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும்'' என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. காலப்போக்கில் மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து தகவல் தெரியவரும். இது மிகவும் நல்ல ஒப்பந்தம். அதிபர் டிரம்ப் அறிவித்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் எரிசக்தியும் அடங்கும். இந்தியா நல்ல தரத்தில் எண்ணெய் கிடைக்கும் நாடுகளிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்யும். உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய கொள்முதல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து கணிசமாக பெரிய அளவில் வாங்கவும், வெனிசுலாவிலிருந்து வாங்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறி வருகிறார்.
இந்த சூழலில், தேவைக்கு ஏற்ப தேவையான இடத்தில் கச்சா எண்ணெயை தரத்தை அடிப்படையாக கொண்டு கொள்முதல் செய்வோம் என மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது.
இதை தீர்மானிப்பது அம்பானி மற்றும் மோடி தான் இவர் எதற்கு உதார் விடுகிறார்?
எல்லா வர்த்தக உடன்படிக்கைகளுக்குப் பின்னும் லாப நஷ்டம் தவிர ராஜதந்திர காரணங்களும் அடங்கியிருக்கும். பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் தார்மீக ஆதரவையும் அளித்துக் கொண்டிருப்பது அமெரிக்கா என்பதற்காக என்றாவது அவர்களுடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியுமா? உலக அரசியலில் சுயநலம் இல்லாத நாடு கிடையாது. உண்மையில் தனிப்பட்ட சொந்த வணிக நலன்களுக்காகதான் டிரம்ப் நாடகமாடுகிறார்.
மோசடி இருப்பதாக தகவல்.
பெரியவே அங்கிருந்து வரும் வேளாண் விவசாய பொருளுக்கு 0%, ஆனால் நாம் 18 % வரி அவருக்கு சிறப்பு, இதில் indian economy based on விவசாயம் என்று பீதி கொல்லுகிரோம், இது வேளாண் சட்டம் விட விவசாயிகளை கடுமையா பாதிக்கும்
குறை சொல்பவர்கள் எல்லாவற்றிற்கும் குறை கூறி கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை புறக்கணிப்பது சிறந்த வழியாகும். நாட்டிற்கு எது நன்மை பயக்குமோ அதைதான் இந்த பாஜ அரசாங்கம் செய்யும் என்பதில் மக்கள் பலருக்கு முழு நம்பிக்கை உண்டு.
ஏன் இது நாள் வரை பெற்றுவந்த அதுவும் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது உங்க தேவைக்கு ஏற்ப இல்லையா இல்லை டிரம்ப் க்கு பொறுக்க வில்லையா
இது அதானிக்கு தேவையாக இருக்கும் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடிஜி ஏற்கனவே சொன்னது போல் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் பதவி காலம் முடியும் வரை நிறுத்தி வைக்கலாம். ஐரோப் யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக செயல் படுத்தலாம். ரஷ்ய கச்சா எண்ணெய் எப்போதும் போல் வாங்கலாம். டிரம்ப் பதவி காலம் முடிந்த பிறகு அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை பற்றி யோசிக்கலாம். ட்ரம்ப்பை நம்ப முடியாது.
பாவம் . இவரு ஒரு பலி கிடா
நல்லதோர் முடிவு பாரத முன்னேற்றத்திற்குமேலும்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்
-
மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு
-
பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்; டிஏசி ஒப்புதல்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு