அரசுக்கு சொந்தமான செயலியை விளம்பரப்படுத்த முயற்சி: ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை
மாஸ்கோ: அரசுக்கு சொந்தமான உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், விளம்பரப்படுத்தும் நோக்கில், சமூக ஊடகமான வாட்ஸ் அப் செயலியை ரஷ்யா தடை செய்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'MAX' என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை ஒழித்துக்கட்டும் வகையில் , நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்துள்ளது.
கண்டனம்
இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அரசு தனக்கு சொந்தமான செயலியில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டை தடுக்க முயற்சித்தது. 10 கோடி பேருக்கும் மேற்பட்ட பயனர்கள் தகவல் தொடர்புக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
ரஷ்ய பயனர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்கிறோம். இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ரோஸ்கோம்நாட்சோர்' கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டெலிகிராமுக்கும்...
அதேபோல் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நிறுவனத்தின் (டெலிகிராம்) நிறுவனர் பாவெல் துரோவ் விமர்சித்தார். அவர், அரசு கட்டுப்பாட்டில் உள்ள செயலிக்கு மாற மக்களை கட்டாயப்படுத்த முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே, ரஷ்ய சட்டங்களைப் பின்பற்றாவிட்டால், பல இணைய தளங்கள் தடை செய்யப்படும் என்று ரஷ்யா எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
whatsappயின் அசுர வளர்ச்சியை யார் நினைத்தாலும் தடுக்க முடியாதுமேலும்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்
-
மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு
-
பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்; டிஏசி ஒப்புதல்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு