அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கறுப்பு உடையணிந்து காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கறுப்பு உடையணிந்து, 10வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க., அரசு, தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று, 10வது நாளாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கறுப்பு உடையணிந்து, காலவரையற்ற வேலைநிறுத்த காத்திருப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் நோஹிரா தலைமை வகித்தார்.

போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்துாரி, மாவட்ட தலைவர் முனியம்மா, செயலாளர் பார்வதி, பொருளாளர் அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement