பள்ளி, கல்லுாரி செய்திகள்...மதுரை

நிறுவனர் தின விழா பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில், நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். சுயநிதிப் பிரிவு தமிழ்த் துறை தலைவர் செல்வக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் கணேசன் அறிமுக உரையாற்றினார். ஓய்வு பேராசிரியை மலர்விழி மங்கையர்க்கரசி, தாவரவியல் துறைத்தலைவர் வாசுதேவன் பேசினர். பேராசிரியர்கள் பெருமாள், தனலட்சுமி, சிந்துஜா மாணவர்களுடன் கலந்துரையாடினர். அலுவலக பணியாளர் அரவிந்த் நன்றி கூறினார். பேராசிரியர் தீபா தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

பள்ளி ஆண்டு விழா பாலமேடு: பத்திரகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா இந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஜோதி தங்கமணி தலைமையில் நடந்தது. பள்ளித் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரதிப்பிரியா வரவேற்றார். தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

பள்ளிச் செயலாளர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். சங்கச் செயலாளர் மயில்வாகனன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாரிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளிப் பொருளாளர் முருகவேல் நன்றி கூறினார்.

தேசிய பெண்கள் தினவிழா மதுரை: காந்தி மியூசியத்தில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி சார்பில் தேசிய பெண்கள் தினவிழா நடந்தது. செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் ஆகியோர் பெண்கள் தின சிறப்பு, பெண்கள் முன்னேற்றத்தில் சரோஜினி நாயுடுவின் பங்கு குறித்து பேசினர். பேராசிரியர்கள் பூபதி ராஜா, பாண்டியராஜன், சுமதி பங்கேற்றனர்.

மாணவிகள் செயல் விளக்கம் வாடிப்பட்டி: காரைக்குடி சேது பாஸ்கர வேளாண் கல்லுாரி மாணவிகள் ராஜெயஸ்ரீ, சந்தியா, தாரணி, வித்யா, அமிர்தா, லட்சுமி, சுவேதா, இலக்கியா கிராம பணி அனுபவ திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி பகுதியில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். பாண்டியராஜபுரம் அடுத்த செம்மேடு கிராமத்தில் மீன் அமினோ அமிலம் பயன்படுத்தி வாழைப்பழத்தின் அளவு மற்றும் மகசூலை அதி கரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். நைட்ரஜன் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்த இயற்கை ஊட்டச்சத்து உள்ள 10 மில்லி மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி தண் ணீரில் கலந்து சாய்வாக வெட்டப்பட்ட வாழைத்தாரின் நுனியை தயார் செய்த கரைசல் படும்படி கட்டி பயன்படுத்துவது குறித்து மாணவிகள் செயல் முறையில் விளக்கினர்.

கல்லுாரியில் விழிப்புணர்வு மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நுகர்வோர் சட்டம், உணவுப் பாதுகாப்பு கலப்பட தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடந்தன. கல்லுாரி முதல்வர் கவிதா வரவேற்றார். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.பாஸ்கரன் பேசினார். சமூகநல அலுவலர் காந்திமதி, இந்திய வழக்கறிஞர் சங்கத்தலைவர் சாமிதுரை, மைய மாநில தலைவர் கர்ணன் ஆகியோர் போக்சோ சட்டம், பாலியல், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை தண்டனை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்துப் பேசினர். நியமன அலுவலர் சிவராமபாண்டியன், அலுவலர் சிவசந்திரன், இணைச் செயலாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவடிவு, கவிதா பங்கேற்றனர். பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.

அறிவியல் கண்காட்சி மதுரை: புதுராமநாதபுரம் ரோடு அமலி மெட்ரிக் பள்ளியில் அறிவியல், தமிழ் தொடர்பான மாணவர்களின் கண்காட்சியை எம்.எல்.ஏ., பூமிநாதன் துவக்கி வைத்தார். மாணவியர் சார்பில் 100க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தப்பட்டன. தாளாளர் ஞானசவுந்தரி, தலைமை யாசிரியர் அமலா, கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, ம.தி.மு.க., நகர் செயலாளர் முனியசாமி, ஆசிரியர் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவியருக்கு விழிப்புணர்வு மதுரை: எல்.பி.கே., நகர் அரசு பள்ளியில் சோனாலிகா ஆரோக்கியம் திட்டம் சார்பில் வளரிளம் பருவ பெண் குழந்தை களுக்கான சுகாதார விழிப்புணர்வு பயிற்சி, கண்காட்சி நடந்தது. மாணவிகளுக்கு சுகாதார பெட்டகம், பரிசு வழங்கபட்டது. தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஏகம் அறக்கட்டளை பயிற்சியாளர்கள் சரஸ்வதி, அன்பரசன் ஆரோக் கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement