'திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா'; சவால் விடுகிறார் உதயகுமார்
மதுரை: ''எனது திருமங்கலம் தொகுதியில் சபரீசன் போட்டியிட தயாரா. அவரது நாடகம் தென்தமிழகத்தில் எடுபடாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதய குமார் சவால் விடுத்தார்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் உதயகுமார் பேசியதாவது: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்து 20 ஆண்டுகளாகி விட்டது. தற்போது காலத்துக்கு ஏற்ப மாற்றுவது மரபு. இத்திட்டம் மூலம் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தி.மு.க., முறைகேடு செய்ய முடியாது. அதனால்தான் எதிர்க்கிறது.
தென் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தி.மு.க., வின் 'சர்வேயர் புலி' முதல்வரின் மருமகன் சபரீசன் மதுரையில் 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார். எனது திருமங்கலம் தொகுதியை தனியாக கவனிக்க கூறியுள்ளார்.
தைரியம் இருந்தால் அவர் திருமங்கலம் தொகுதியில் நிற்க முடியுமா. அவர் கருணாநிதி குடும்பத்தில் எப்படி நுழைந்தார். அவரது பொது வாழ்க்கை என்ன என மக்களுக்கு தெரியும்.
சபரீசனுக்கும் மக்கள் சேவைக்கும் என்ன சம்பந்தம். கனிமொழி வீட்டுக்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி 'நானும் ரவுடி' என்பது போல், நானும் உழைக்கிறேன் என்ற அவரது நாடகம் தென் தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு பேசினார்
மேலும்
-
சிவராத்திரி விழா ஒளிபரப்பு ஈஷா யோக மையம் அழைப்பு
-
பிளாஸ்டிக் கழிவு குவிப்பு பொதுமக்கள் அதிருப்தி
-
பால் உற்பத்தி பெருக சிறந்த வழி விவசாயிகளுக்கு அறிவுரை
-
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
-
இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
-
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?