ஜார்க்கண்டில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் தாக்குதல்; 6 பேர் பலி
ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் ஊருக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஹசாரிபாக் மாவட்டத்தில் கோண்ட்வார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஏராளமான காட்டு யானைகள் புகுந்திருக்கின்றன. கண்ணில் தென்பட்ட அனைத்தையும் சுக்குநூறாக்கின.
யானைகள் கூட்டத்தின் அட்டகாசத்தை பார்த்த ஊர்மக்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்த காட்டு யானைகள், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்களை மிதித்தது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நடப்பது என்ன என்பதை அறியாமல் பீதியில் ஊர் மக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்தனர். 6 பேரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானைகளை விரட்டுவதாக நினைத்துக் கொண்டு அவற்றை அடித்து விரட்ட எத்தனித்த போது, ஆக்ரோஷம் கொண்ட யானைகள் மனிதர்களை தாக்கியதாக வனத்துறையினர் கூறி உள்ளனர்.
யானைகள் இருக்கும் இடத்தில் வீடு கட்டாதீர்கள்மேலும்
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை
-
வங்கதேசத்திற்கே வெற்றி சொந்தம்: ஒற்றுமையுடன் செயல்பட தாரிக் ரஹ்மான் அழைப்பு
-
திருப்பூர் நீதிமன்றம் அருகே வெடிபொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
-
ஊடுருவல்காரர்கள் ஓட்டுகள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மம்தா; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு