முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் வினியோகம்: சதியை உணர்ந்து செய்தோம் என்கிறார் ரகுபதி
சென்னை: ''எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்து தான், 5,000 ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வழங்கி உள்ளார்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:
பிப்., மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, 3,000 ஆயிரத்தை, மொத்தமாக, 1.31 கோடி பெண்களுக்கு, முதல்வர் வழங்கி, இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். இந்தத் தொகையை அறிவித்து விட்டு வழங்கினால், எதிர்க்கட்சிகள் உடனே நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி விடுவர். எனவே, பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பயன், தடையின்றி சேர வேண்டும் என, முதல்வர் இதை வழங்கி உள்ளார்.
தேர்தல் நேரத்தில் தான் கோடை கால நிதி வழங்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது. இத்திட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., வினர் சட்டசபை தேர்தலை சாக்காக வைத்து, நீதிமன்ற வழக்குகள் வாயிலாக முடக்க சதி செய்தனர். இதை உணர்ந்து தான், மூன்று மாதங்களுக்கான தொகையை, முதல்வர் முன் கூட்டியே வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிரணி நடனம்
அறிவாலயத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, மகளிர் வங்கி கணக்கில், 5,000 ரூபாய் வரவு வைத்ததற்காக, மகளிர் அணியினர் நன்றி தெரிவித்தனர். தங்கள் கையில், 5,000 ரூபாயை வைத்தபடி, நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆயிரம் விளக்கு பகுதியில் பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள், சாலையில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பெண் கவுன்சிலர் பிரேமா சுரேஷ் ஏற்பாட்டில், இனிப்பு வழங்கப்பட்டது.
பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே நாளில் காலி. இனி ரோடு, ஹாஸ்பிடல், பாலம், பள்ளிக்கூடம், அணைகள் கட்ட சொல்லி ஸ்டாலினை கேட்காதீங்க. அதற்கான பணத்தை தான் இப்போதே வாங்கிட்டீங்க. இனி மழைபெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்தா, மொண்டு குடிங்க.
மக்கள் வரிப்பணமா இல்லை யார் வீட்டு சொத்திலிருந்து எடுத்துக் கொடுக்கிறார்கள்?
பெண்களுக்கு கொடுக்கும் இந்த பணத்தில் அவர்கள் 3000 ரூபாயை கணவர்களிடம் நிச்சயமாக தருவார்கள் ,1 பாட்டில் டாஸ்மாக் பீர் 230 ரூபாய் , வெய்யில் சூடு தொடங்கி விட்டது , சர்வ சாதாரணமாக 12 பாட்டில் பீர் குடித்து ஆண்கள் சந்தோஷமா இருப்பார்கள் , வாழ்க திராவிட மாடல் , வளர்க சுய கவுரவம் இல்லாத தமிழ் சமுதாயம் , தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
ஜெயித்து வரப்போகும் ஐந்தாண்டிற்கும் சேர்த்து ரூபாய் 65,000 தைக் கொடுக்க இந்த அறிவு ஜீவி இரக்குபதி சட்ட அறிவை பகர்ந்திருக்கலாம். ஒருவேளை திமுக தோற்றால் திரும்பவும் பழைய இடத்திற்கே செல்லலாம் என்ற ஐடியா இருக்குமோ?
5000 ரூபாய் மக்கள் வரிப்பணம் மற்றும் கடன் வாங்கி மக்களுக்கு பெரும்பாலும் கட்சி காரர்களுக்கு கொடுப்பது தான் சதி . உங்கள் கட்சி அல்லது அடித்த கொள்ளையிலிருந்து கொடுத்திருந்தால் கொஞ்சமாவது சரி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தெரியாமல் 30 வருடமாக ஆட்சி செய்து இருப்பது துரதிஷ்டம்
இந்த கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறதா இது கூட தெரியாமல் 5000 ரூபாய் கொடுத்துவிட்டு வக்காலத்து வேறு. முட்டாள்தனம் வேண்டுமென்றே அடுத்தவர் பெயரில் பழி போடுகின்றனர்
இவரே போதும் இருக்கும் ஓட்டுக்களையும் இழக்க....! அப்படி இருக்கிறது இவர் பேட்டிகள்!
அது ஒண்ணும் இல்லைங்க. அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு இந்தப்படம் குடுக்க முடியாது. அந்த முன்பணம் தாங்க இது.
இப்ப தான் சட்ட சிக்கல் அதிகம் , நீதி மன்றம் கேள்வி கேட்டால் ......வோட்டுக்கு பணம் கொடுத்த கதை ....நல்லா மாட்டிக் கொண்டார்கள் .....