உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
சேலம்: ''மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் தான். உங்களுக்கு யார் வேண்டும்; விஜயா அல்லது ஸ்டாலினா?'' என சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில் குறிப்பிட்டார்.
சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: தைரியம் தான் எல்லாத்துக்கும் அடிப்படை. எல்லாத்துக்கும் பவர். அப்படிப்பட பவர் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் நம்மை ஏளனமாக பார்க்கிற நேரத்தில், நாம் யார் என்று நிரூபித்து காட்ட வேண்டும் என்று தோன்றும். ஒரு உத்வேகம் வரும். அப்படி நிரூபிக்கும் பாயிண்ட் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் எந்த விஷயத்தில் நம்மளை கிண்டலும், கேலியுமாக பேசுகிறார்களோ, அதே விஷயத்தை வைத்து பாசிட்டிவ் ஆக மாற்றுவதும், தீயாக மாற்றுவதும் அந்த இடத்தில் தான் பவர் ஆரம்பிக்கிறது. அப்படிப்பட்ட அந்த பவரை சொல்கிற உண்மையான பாயிண்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.
கிண்டலும், கேலியும்!






நீதி கேட்டு…!
தமிழகத்தின் முதல் படை வீரனாக, முதல் பாதுகாவலனாக உங்கள் கூடவே நிற்க வேண்டும் என்பது தான் எனக்கு குறிக்கோள். இன்னைக்கு இந்த விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டுமே வரவில்லை. நீதி கேட்டும் வந்து இருக்கிறேன். உங்களுக்காக நீதி கேட்க தான் அரசியலுக்கே வந்தேன். ஆனால் இன்றைக்கு நான் உங்களிடம் நீதி கேட்பதற்காக வந்து இருக்கிறேன். இந்த விஜய் என்னங்க தப்பு செய்தான். தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது ஒரு தப்பா? எல்லாத்தையும் ஒதுக்கிவிட்டு மக்களுக்காக மட்டும் வந்தான், அது ஒரு தப்பா?
@quote@மற்ற கட்சிகளுக்கு எல்லாம் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுப்பார்கள், இடம் கொடுப்பார்கள். ஆனால் நமக்கு மட்டும் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள், இது என்னங்க நியாயம்?quote
மக்களிடம் நீதி
நான் மக்களை சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் உரிய இடமும், பாதுகாப்பும் மற்ற கட்சிகளுக்கும் எல்லாம் கொடுப்பார்கள், ஆனால் எனக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுக்கவும் விட மாட்டார்கள், இது என்னங்க நியாயம். எஸ்ஓபி என்று சொல்வார்கள். மற்றனர்களுக்கு அது ' Standard Operating Procedure' எனக்கு மட்டும் அது ஸ்டாலின் சார் ஆப்ரேட்டிங் procedure.
விஜய் உண்மையானவன், நமக்கு எதிராக சதி, பழி போடுகிறவர்கள் யார் என்று எனது சொந்தங்களாகிய உங்களுக்கு தெரியும். அதனால் நான் மக்களாகிய உங்களிடம் நீதி கேட்கிறேன். செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு, செல்பே எடுக்காத ஒரு அற்த பழைய அர்த்மெட்டிக் கணக்கு. இது எல்லாம் வேலைக்கே ஆகாது. ஆணித்தரமாக அடித்து சொல்கிறேன்.
விசிலுக்கு தான்
காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். அதுவும் இந்த விஜய் வந்த பிறகு நடக்கவே நடக்காது. ஆயிரம், 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம் என்று வண்டி வண்டியாக வந்து கொட்டுவார்கள். சாமி மேல சத்தியம் எல்லாம் வாங்குவார்கள். அப்படி தான் உங்களை இத்தனை வருடமாக ஏமாற்றி இருக்கிறார்கள். சந்தோஷமாக வாங்கி கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் பணம் தான். வாங்கிட்டு அவர்களின் காதில் விசில் அடித்து அனுப்புங்கள்.
@quote@நம்முடைய அடுத்த இளம் தலைமுறையினருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த பணத்தை கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் என்ற கலாசாரம் ஒழிய வேண்டும். quote
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான்.
கொள்ளையடித்த பணம்
வேற யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். நீங்கள் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் பணம் எல்லாம் வீணாகத்தான் போகிறது. குப்பையில் தான் தூக்கி போட வேண்டும். உங்களுடைய ஊழல் ஆட்சியையும், மக்கள் குப்பையில் தான் தூக்கி போட போகிறார்கள். அடுத்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி நண்பா, நண்பிகளே வீட்டில் டிவியில் பிரசாரத்தை பார்த்து கொண்டு இருப்பீர்கள். உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் நாங்கள் அரசியலுக்கு வந்து இருக்கிறோம். எல்லோரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள்.
வெறுப்பு அரசியல்
எந்த கட்சியையும் அழிப்பதற்கோ, ஒழிப்பதற்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தனிப்பட்ட கோபமோ, வன்மமோ யார் மேலேயும் கிடையாது. வெறுப்பு அரசியல் செய்வதற்கு அரசியலுக்கு வரவில்லை. அரசியல் ரீதியாக எதிரி யார் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்காக எங்களது நன்றி கடனை செலுத்துவதற்கு தான் அரசியலுக்கு வந்து இருக்கிறோம். அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி அதிகாரத்தை செய்ய முடியும் என்று ஒரே விஷயத்தை சொல்லி அழுபவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.
தில்லு, திராணி
@quote@அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர இவர்களுக்கு வேறு என்ன கொம்பு முளைத்த அனுபவம் இருக்குதா?quote அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அடுத்தவர்களின் முகவரியில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்கள் எல்லோருக்கும் ஒரு சவால். என்னை மாதிரி தனியாக, சொந்தமாக கட்சி ஆரம்பித்து, ஒரு சதவீதம் வாக்கு காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா?
30 வருடமாக மக்கள் இயக்கமாக இருந்து இன்றைக்கு மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்து இந்த கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற, 75 வருட கட்சி, 50 வருட கட்சி, இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்களை எல்லாம் மீறி, இன்னைக்கு களத்தில் தனியாக நின்று இரண்டே வருடத்தில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30% மக்கள் ஆதரவை பெற்ற நமக்கு அனுபவம் இல்லையா?
அவர்களின் அனுபவம்
கட்சி ஆரம்பித்தவர்களை மறந்தது, கொள்கைகளை மறந்தது தான் அவர்களின் அனுபவம். நமக்கு கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை தான். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்து கொண்டு நேரடியாக சரண் அடைவது, மறைமுகமாக சரண் அடைவது, இந்த மாதிரி அனுபவம் எங்களுக்கு இல்லை. மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் சூப்பரான நல்லாட்சியை கொடுக்க முடியும். நல்லாட்சி கொடுப்பதற்கு மெத்த படித்த மேதாவிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
@quote@காமராஜர், எம்ஜிஆர் மாதிரி, மக்கள் சக்தியின் துணையால், மக்கள் மீது நல்ல அக்கறையுடன் இருக்கும் அதிகாரிகளின் துணையால் சூப்பரான நல்லாட்சி என்னால் கொடுக்க முடியும், செஞ்சு காட்டுறேன்.
quote
ஸ்டாலின் சாருக்கு கேள்வி
ஸ்டாலின் சாருக்கு மக்கள் சார்பில் ஒரு கேள்வி. மக்களுடைய கனவு என்ன என்று உங்களுக்கு தெரியுமா சார். மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர வைக்க வேண்டும் என்பது தான், மக்களுடைய ஒரே கனவு. மக்கள் விரோத திமுக அரசு நிலைக்க கூடாது என்பது தான் மக்களுடைய கனவு. 100 சதவீதம் தூய சக்தி தவெக ஆட்சி அமைக்கும். அதில் உங்களுடைய கனவு பலிக்கும். தமிழகம் டில்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்று ஸ்டாலின் சார் அடிக்கடி சொல்லுவார்.
ஸ்டாலினா, விஜயா?
ஸ்டாலின் சார் சட்டம் ஒழுங்கில் அவுட் ஆப் கன்ட்ரோல். திமுக ஆட்சியே அவுட் ஆப் கன்ட்ரோல் தான். மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மக்களே ஒரு கேள்வி. விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? தைரியமாக இருங்கள், வரப்போவது உங்கள் ஆட்சி, நம்ம ஆட்சி. சமூக நீதிக்காக நல்ல ஆட்சி அமைப்போம். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்ம கூட மக்கள் இருக்கிறார்கள். இதுக்கு மேல என்ன வேணும்? நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.
@block_G@
இதற்கிடையே பிரசாரக் கூட்டத்தில் ஒரு மயங்கி விழுந்து உயிரிழந்தார். சுரஜ் என்பவர் உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.block_G
தினமலர் நேரலை
சேலத்தில் விஜய் தலைமையில் நடந்த கட்சி நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு K.N. நேரு அவர்களுக்கு – பொதுமக்களின் வேண்டுகோள்
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
மதுரை மாவட்டம் – திருமங்கலம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நீண்டகால தாமதம் குறித்து பொதுமக்களின் கவலைக்குரிய நிலையை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
அரசு குடிநீர் திட்டத்தின் கீழ் பல வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில தகுதியான வீடுகள் மட்டும் காரணமின்றி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல முறை எழுத்து மூலம் மற்றும் ஆன்லைன் முறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.
இந்நிலை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது:
• ஏன் சில இணைப்புகள் மட்டும் தவிர்க்கப்படுகின்றன?
• இரண்டு ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டதற்கான பொறுப்பேற்பு எங்கு?
• குடிநீர் வழங்கப்படாத நிலையிலும் ஏன் வரி வசூல் தொடர்கிறது?
குடிநீர் என்பது அத்தியாவசிய அடிப்படை உரிமை. வழங்கப்படாத சேவைக்காக கட்டணம் வசூலிப்பது இயற்கை நீதி கொள்கைக்கு முரணானது. இத்தகைய தாமதம் நிர்வாக அலட்சியம் மற்றும் கண்காணிப்பு குறைபாட்டைக் காட்டுகிறது.
எனவே, தாங்கள் நேரடியாக தலையீடு செய்து, நிலுவையில் உள்ள இணைப்புகளை உடனடியாக வழங்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்/ஒப்பந்ததாரர்களின் பொறுப்பை நிர்ணயிக்கவும், குடிநீர் வழங்காத காலத்திற்கான வரிகளை விலக்கு செய்யவும் உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுநலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
– கவலைக்கிடமான பொதுமக்கள்
இரண்டு பேருமே வேண்டம்
ரெண்டு புடலங்காயும் வேணாம். தாமரை தான் வேணும்.
ஸ்டாலின் போதும்
கண்டிப்பா நீ வேணாம் பா
Vijay ji leave alone these hate speeches , spell out what is your ideology and detailed improvement plans for better earning of Tamils in Tamilnadu . Do not give some generic sentences and slogans .
ஆட்சிக்கு வரல. அதுக்குள்ளே வருமான வரி கட்டல. டிக்கெட் கள்ள சந்தையில அதிக விலைக்கு விக்கிறது. நீங்க தான் உண்மையான தீய சக்தி.
ரெண்டுபேருமே வேண்டாம் என்று மக்கள் கூறவேண்டும். எங்களுக்கு நேர்மையாக ஆட்சி புரியும் ஒரு கட்சிதான் வேண்டும் என்று கூறவேண்டும்.
உண்மையிலே விஜய் வேணுமா? இல்லை ஸ்டாலின் வேணுமா? என்ற நிலை ஒரு வேளை ஏற்பட்டால்? நாளையே பவர்ஸ்டார். சீனிவாசனை ஒரு கட்சி ஆரம்பிக்கச் செய்வோம். ஒரு வேளை அவர் ஜெயித்து முதலமைச்சர் ஆனால் ? உங்க ரெண்டு பேரையும் விட அவர்தான் பெட்டர் சாய்சாக இருப்பார்.
நீங்க ரெண்டு பேரும் வேண்டாம். விரட்டியடிக்க மக்கள் தயார்.மேலும்
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை
-
வங்கதேசத்திற்கே வெற்றி சொந்தம்: ஒற்றுமையுடன் செயல்பட தாரிக் ரஹ்மான் அழைப்பு
-
திருப்பூர் நீதிமன்றம் அருகே வெடிபொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
-
ஊடுருவல்காரர்கள் ஓட்டுகள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மம்தா; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு