விஜய் பிரசாரத்தில் மீண்டும் அசம்பாவிதம் : சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி
சேலம்;சேலத்தில் நடிகர் விஜயின் பிரசாரக்கூட்டத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் உள் வளாகத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு, தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் குறைவானர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. இதன் காரணமாக கடும் வெயிலில் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக நின்று கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக அங்குள்ளோர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்தார்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தவர் பெயர் சுராஜ் (37) என்பதும், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர் சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றியவர் ஆவார்.
கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. அது பற்றிய எந்த தகவலும் தெரியாத நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். கடும் வெயிலே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (41)
bharathi - ,
14 பிப்,2026 - 10:33 Report Abuse
Actor Joseph vijay ...dont just write as Vijay 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
13 பிப்,2026 - 23:27 Report Abuse
ஒருத்தர வளர விடாம எவ்ளோ பேரு தடுக்குறாங்க ... 0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
13 பிப்,2026 - 21:02 Report Abuse
இனிமேல் நடிகர் விஜய் கூட்டத்துக்கு வருபவர்கள் உயிர் காப்பீட்டு எடுத்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். நடிகர் விஜயும் தன் அப்பாவி விசுவாசிகள் கட்டுப்பாட்டை சிறிதும் கடைபிடிக்க தெரியாத கட்சி தொண்டர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டையுடன் ஆயுள் காப்பீட்டும் வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.அரசியல் செய்து பெயர் எடுப்பதற்கு அப்பாவி தமிழர்கள் உயிருடன் தான் கிடைத்ததா? 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
13 பிப்,2026 - 20:59 Report Abuse
பரலோகம் அனுப்பி வைக்கும் வேலையை கனகச்சிதமாக செய்கிறார் மிஸ்டர்.மூணுசா.....பரலோக ராஜ்ஜியதுக்கு வழிகாட்டி போல.. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 பிப்,2026 - 20:53 Report Abuse
முதலில் மதிகெட்ட மக்களை குறைசொல்லவேண்டும். கொளுத்தும் வெய்யிலில் ஒரு அரசியல் கூட்டம் அவசியம்தானா? கொளுத்தும் வெய்யிலில் யாராவது அரசியல் கூட்டம் கூட்டுவார்களா? கரூர் நிகழ்ச்சியை எப்படி விஜய் மறந்தார்? 0
0
Reply
K V Ramadoss - Chennai,இந்தியா
13 பிப்,2026 - 20:50 Report Abuse
விஜயுக்கு நேரம் சரியில்லை...ராசி சரியில்லை ... 0
0
Reply
karuththuraja - ,
13 பிப்,2026 - 20:41 Report Abuse
ஏன் போலீஸ் 12 to 3. 00 மணிக்கு அனுமதிகொடுக்கிறார்கள்....வேண்டுமென்று தான் கொடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்... 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
13 பிப்,2026 - 20:09 Report Abuse
வெய்யில் பற்றிய விதிமுறைகள் இல்லாத முட்டாள்கள் வகுத்த விதி 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
13 பிப்,2026 - 20:08 Report Abuse
ஏதோ விதி முறைகள் போட்டாங்களாமே அதுல வெய்யில் பற்றி எதுவும் இல்லையா? இப்போ சேர்த்துட்டா எல்லா கட்சிகளுக்கும் உபயோகப்படும் , முக்கியமாக உடைக்கும் சூரியன் கட்சிக்கு 0
0
Reply
Sun - ,
13 பிப்,2026 - 19:51 Report Abuse
விசயண்ணா இறந்தவருக்கு நேரில் அஞ்சலி ஏதும் செலுத்தினாரா? எப்படி செலுத்துவார்? அவர்தான் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு நேரடியாக வந்த தேவ குமாரன் ஆயிற்றே? இந்த தேவ குமாரன் தன்னைத் தானே எம்.ஜி.ஆருடன் ஒப்பீடு செய்து கொள்கிறார்.விஜய் எம்.ஜி.ஆரின் பெருவிரல் நகம் அல்ல எம்.ஜி.ஆரின் இடது கால் சுண்டு விரலின் நகத்திற்கு கூட ஈடாக மாட்டார். 0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்
-
ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி.. இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்; தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை
Advertisement
Advertisement