ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி.. இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்; தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேச மாட்டார்கள்,” என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
தி.மு.க., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:
மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி குடும்பத் தலைவியருக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது; எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்து விட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், பிரதமர் மோடி துணையோடு, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முயற்சி செய்தனர்.
இதை தெரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், முன்கூட்டியே 5,000 ரூபாய் வழங்கியுள்ளார். இதனால், தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஆதரவை, அனைவரும் அறிவர்.
எனவே, தி.மு.க., கூட்டணியில், இனிமேல் யாரும், ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்க மாட்டார்கள். ஆட்சியில் பங்கு குறித்து, காங்., தலைவர்கள் ராகுல், கார்கே, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினால் பதில் சொல்லலாம். மற்றவர்கள் பேசுவதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் பேசிய பாரதி, “மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கிய தகவல் வெளியானதும், எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு மாரடைப்பு வந்து விட்டது.
“ஆட்சியில் பங்கு வேண்டும், வெங்காயம் வேண்டும் என கேட்டவர்கள் எல்லாம், 'சீட்' கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்,” என கூறியுள்ளார்.
மேலும்
-
மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாள மக்கள் கோஷம்
-
ரஷ்யா - உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது; ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?