பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு: நம் வாக்குறுதிகளை, கட்சியினர் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். மகளிர் வங்கி கணக்கில், 2,000 ரூபாய் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு, ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசம் என்பதும், பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க., 2021ல் தந்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்கள், இவங்க வாக்குறுதிகளை நம்புவாங்களா என்பது சந்தேகம் தான்!
தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: பல வீட்டுக்காரர்கள் ஒன்றாகக் கூடி, கூட்டாஞ்சோறு ஆக்கலாமே தவிர, அவரவர் வீட்டுக்கானதை, அந்தந்த வீடுகள்தான் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதுபோல், பல மாநிலங்களால் கூடிய நாட்டை பல மாநிலங்களை சேர்ந்த பல கட்சிகள் சேர்ந்து ஆளலாம். ஆனால், ஒரு மாநிலத்தை, அந்த மாநில மக்களால் பெரிதும் விரும்பும் ஒரு கட்சியால் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். இதை தீர்க்கத்தோடு தெளிவுப்படுத்தி இருக்கிறது, தி.மு.க., தலைமை.
அப்படி என்றால், இவங்க யாரையும் கூட்டணியில் சேர்க்காம, தனித்து நின்று ஆட்சியை பிடிக்க வேண்டியது தானே... ஏன் டில்லிக்கு காவடி எடுத்து கூட்டணி பேச்சு நடத்துறாங்க? தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ராமா, ராமா என்று சொன்னவர்களை எல்லாம், முருகா, முருகா என ஓட விட்டிருக்கிறோம் என்றால், அது தமிழக மக்களின் பக்தி. முருகனின் வேல் எங்கள் கைகளில்தான் இருக்கிறது' என, அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அந்த வேல், முருகனுக்கு தீபம் ஏற்றுவதை தடுக்கும் உங்கள் கைகளில் இருப்பது ஆபத்து என்பதால் தான், 'அரசே... ஆலயத்தை விட்டு வெளியேறு' என்று சொல்கிறோம்.
முருகனுக்கு தீபம் ஏற்றுவதை தடுத்தவர்களை, முருக பக்தர்கள் ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்காமல் விட மாட்டாங்க! அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'கல்விக்கும், மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி செலவு அல்ல; வருங்கால சமுதாயத்துக்கான முதலீடு' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியிடங்களை உருவாக்கவில்லையே... சொல்வது ஒன்று; செய்வது வேறாக உள்ளதே!
இப்ப இருக்கும் அரசு டாக்டர்கள், செவிலியர்களுக்கே ஊதிய உயர்வு தர முடியாமல் திண்டாடுறவங்க, புதுசா நியமனங்களை செய்தால், பணத்துக்கு எங்க போவாங்க?
மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...