அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்த திமுக: அண்ணாமலை
சென்னை: ''கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலம் முன்பாகவே விடுவித்து, உயிரிழந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக'', என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: கோவையில், கடந்த 1998ம் ஆண்டு திமுக ஆட்சியில், இதே நாளில், பயங்கரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில், 58 உயிர்களைப் பறிகொடுத்தும், சுமார் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததும், நமது மனதில் ஆறாத வடுவாகப் பதிவாகியிருக்கின்றன.
இந்திய அளவில், பொருளாதாரத்தில் முதல் இடங்களில் வந்திருக்க வேண்டிய நமது கோவை மாநகரம். பிரிவினைவாத சக்திகளாலும், தேர்தல் வாக்குகளுக்காக அவர்களுக்குத் துணை போகும் திமுக உள்ளிட்ட கட்சிகளாலும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலம் முன்பாகவே விடுவித்து, உயிரிழந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக. இன்றும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று கூறி, மீண்டும் பயங்கரவாதிகளுக்குத் துணை போகிறது.
தேர்தல் வாக்குகளுக்காக, பொதுமக்கள் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் திமுகவை அகற்றுவதே, கோவை பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உயிரை இழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
S.Sivarajan - fujairah,இந்தியா
14 பிப்,2026 - 18:00 Report Abuse
இந்த அரசியல்லாம் எடுபடாது, அவங்களைபோல நீங்களும் மத்தியிலிருந்து அக்கவுண்டுக்கு ஐயாயிரம் போட்டுவிடுங்க. 0
0
Reply
அசோகன் - ,
14 பிப்,2026 - 15:57 Report Abuse
அண்ணாமலையின் கருத்து மக்கள் மனதில் பதியவேண்டும்...... எத்தனை நாட்கள்தான் தமிழ் மக்கள் பொய்களை நம்பிக்கொண்டே இருப்பார்கள்...... அண்ணாமலை போன்ற நேர்மையான திறமையான அரசியல்வாதி இனி கிடைப்பது அரிது 0
0
Reply
vivek - Benaras,இந்தியா
14 பிப்,2026 - 13:53 Report Abuse
இன்னக்கி எல்லா பக்கமும் ஒரே கதறல் சத்தம் தான் கேக்குது. 0
0
vivek - ,
14 பிப்,2026 - 15:45Report Abuse
இல்லை இன்னைக்கு டாஸ்மாக் நிரம்பி.வழிகிறது benaras 0
0
Reply
GMM - KA,இந்தியா
14 பிப்,2026 - 13:39 Report Abuse
ராஜீவ் கொலையில் காங்கிரஸ், திமுக முக்கிய பிரமுகர் இறக்கவில்லை. முன் அறிவிப்பு. அது போல் கோவை குண்டு வெடிப்பில் அமைதி மார்க்கம் யாரும் காயம், இறப்பு இல்லை. முன்னறிவிப்பு. சிக்கியது சிலர். அதில் கூட முன்கூட்டி விடுதலை? நீதிமன்றம் எப்படி ஏற்கிறது? கேரளாவில் ஒரு அமைதி பெண் வீடியோ எடுத்து அவமானம் தாங்காமல் அந்த சிறு பான்மை பிரிவு சேராத ஆண் மகன் இறப்பு. தற்போது வீடியோ பெண்ணுக்கு முன் ஜாமின். குறை அதிகம் உள்ள போது குற்றம் எப்படி குறையும்.? 0
0
Reply
அப்பாவி - ,
14 பிப்,2026 - 12:56 Report Abuse
மத்திய அரசு என்ன பண்ணுதாம்? தூக்கி உள்ளே வெக்க வேண்டியதுதானே? மாத்தி மாத்தி என்.ஐ.ஏ விசாரிச்சுதே? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
14 பிப்,2026 - 12:35 Report Abuse
குண்டுவெடிப்பில் மூர்க்க ஆட்கள் ஒருவர் கூட இறக்கவில்லை. ஒருவர் கூடவா அப்போது அப்பகுதிகளில் இல்லை? இல்லை முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்து விட்டதால்?. 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
14 பிப்,2026 - 13:10Report Abuse
இன்று என்ன நாள் புல்வாமா நடந்தது 41 ராணுவ வீரர் பலி ஆன நாள் 0
0
Reply
எஸ் எஸ் - ,
14 பிப்,2026 - 12:28 Report Abuse
என்ன சொல்லி என்ன பிரயோஜனம் மிஸ்டர் அண்ணாமலை? 2024 இல் இதே கோவை மக்கள்தானே திமுகவுக்கு வெற்றி கொடுத்தனர்? 0
0
Reply
மேலும்
-
மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாள மக்கள் கோஷம்
-
ரஷ்யா - உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது; ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
Advertisement
Advertisement